Saturday, April 6, 2024

சுருங்கி போன உலகில்

மழைக்காக எங்கும் 
மரங்கள் பூமியெங்கும் 

அன்புக்காக எங்கும் 
மனிதர்கள் வீடுதோறும்

வெளியில் விளையாட
ஆட்களீன்றி பிள்ளைகள் 

உறவுகள் உதவாதா என
காத்திருக்கும் உள்ளம் 

இப்படி பெருகி 
கிடக்கின்றன எல்லாம்
சுருங்கி போன உலகில்.