இரண்டு ஷிஃப்ட் வேலைக்குப் பின்
நள்ளிரவில் வீடு சேர்பவன்
சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான்.
தன்னை மலடாக்கிய உணவை
இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான்.
ஆடு மாடுகளின் மேவு
ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்னைகளை
அலைக்கற்றை வழி விசாரித்து அறிகிறான்.
டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு
போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு
உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு.
- சேயோன் யாழ்வேந்தன்
நள்ளிரவில் வீடு சேர்பவன்
சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான்.
தன்னை மலடாக்கிய உணவை
இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான்.
ஆடு மாடுகளின் மேவு
ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்னைகளை
அலைக்கற்றை வழி விசாரித்து அறிகிறான்.
டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு
போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு
உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு.
- சேயோன் யாழ்வேந்தன்
No comments:
Post a Comment